Thursday, June 14, 2012

நீ இன்னும் அழகாய்த்தான் இருக்கின்றாய்






இன்று போல் தான்
ஒரு மழை நாளில்
அன்று
நீயும் நானும் சந்தித்திருந்தோம்

வானம்
இருண்டு கிடந்தது
இடியின் ஓசை....
பறவைகளின் கீச்சொலி....
தவளைகளின் சத்தம்....
மரங்களில் காற்றொலி....
இவை எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது
உன்னைப் போலவே..


வான வெளியிலே தோன்றும்
ஒரு மின்னல் கீற்றென – பளிச்சென்று
நீ அழகாய் இருந்தாய்

நானும் அழகாய்த்தான் இருந்தேன்
ஆனாலும் அன்று
வானம் இருண்டு கிடந்தது
இன்றும் அப்படித்தான்

வானம் இருண்டு கிடக்கின்றது
அதே இடியின் ஓசை...
பறவைகளின் கீச்சொலி...
தவளைகளின் சத்தம்...
மரங்களில் காற்றொலி...
அப்படியேதான் இருக்கின்றது

நீ மட்டும் அருகில் இல்லை.
வானம் இருண்டு கிடக்கின்றது. – என்
வாழ்க்கை வானம் இருண்டு கிடக்கின்றது

நீ..............
இன்னும்.... இன்னும்.... இன்னும்....
அழகாய்த்தான் இருக்கின்றாய்
நானோ.....?



4 comments:

Yaathoramani.blogspot.com said...

நீ..............
இன்னும்.... இன்னும்.... இன்னும்....
அழகாய்த்தான் இருக்கின்றாய்
நானோ.....?//

இறுதி வரிகள் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சசிகலா said...

நீ மட்டும் அருகில் இல்லை.
வானம் இருண்டு கிடக்கின்றது// இரண்டு வரிக்குள் சொல்லிவிட்டீர்கள் காதலை .

கோவி said...

அசத்துங்க..

sathees said...

"நானும் அழகாய்த்தான் இருந்தேன்
ஆனாலும் அன்று
வானம் இருண்டு கிடந்தது"
அடேய் நண்பா...
அன்று வானம் இருண்டு கிடந்ததால் தான்
நீயும் கூட அழாகா
இருந்திருக்கிறாய். ஹா...ஹா..ஹா.

Post a Comment