Friday, January 20, 2012

தேரோடு வந்த தேவதை...




காதலீ...........

அந்தத் தேர்த்திருவிழாவில்
உன்னையும் தேரையும் - என்னால்
அடையாளம் கண்டுகொள்ளவே
முடியவில்லையடி

ஆனாலும்
உன் சலங்கைச் சத்தம்தான்
அடையாளம் காட்டியது.
உன்னை எனக்கு

பின்னே.....
எந்த தேர் தான்
சலங்கை கட்டி  உலாவரும்?

சகி!
அன்று போலவே
இன்னுமொரு முறை
என் முன் பவனி வா!
இல்லை........கனவுகளிலாவது
அப்படி வந்து போ

சே!
எப்படி முடியும்?
கண்கள் தூங்கினால்தானே
கனவுகள் வருவதற்கு
இவன் தான் 
தூக்கத்தைத் தொலைத்தவன் ஆயிற்றே

பரவாயில்லை
அணுவிலும் சிறிய கருவையும்
பிரிக்கும் சக்தி கொண்டவளே
என் திறந்த விழிகளுக்குள்ளே
அப்படியே வந்து உலாவு
தற்காலிக மகிழ்ச்சியாவது
என் மனம் கொண்டாடட்டும்